ஆச்சரியங்கள் மூலம் பாம்புகள் தடுமாறும். இவற்றை ரகசியங்களோடு தொடர்புப்படுத்தலாம். “புல்லில் உள்ள பாம்பு” என்றால் நம்ப முடியாத ஒருவர், உங்களை ஏமாற்றக்கூடியவர், உங்களிடம் இருந்து ரகசியத்தை காப்பவர் என குறிப்பிடலாம். சுவாரசியமாக இது வேறு ஒரு நபராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அறிந்த உண்மை ஒன்று இருக்கலாம்; ஆனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்.மறைந்திருக்கும் பேரார்வங்களை கொண்டுள்ளீர்களா?கனவில் வரும் பாம்புகள், அடிப்படையில் நாம் பயப்படக்கூடிய ஆற்றல் மிக்க அறிகுறிகளை குறிக்கும். அதற்கு காரணம் அவை கொண்டுள்ள பலமும், அது கொண்டு வரும் மாற்றமே. சீறி எழும் பாம்பு, அல்லது தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இருக்கையில் விழிக்கும் பாம்பு, அல்லது சுருண்டிருந்த பாம்பு திடீரென உயிரை பெறுவது போன்றவைகள் எல்லாம் சுலபமாக ஓடத் துவங்கும் உங்களது ஆற்றல், பேரார்வம் மற்றும் உள்நோக்கத்தை குறிக்கும்.ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கும்கனவுகளில் வரும் பாம்புகள், ஆன்மீக செயல்முறையான, முதுகு தண்டின் அடியில் இருந்து தலையின் உச்சியை அடைந்து, அதற்கு மேல் செல்லும் ஆற்றலான குண்டலினியை விழிக்க வைக்கும் ஒன்று என சில கிழக்கு கலாச்சாரங்கள் நம்புகின்றன. கனவில் வரும் பாம்புகள் உங்கள் அழிவை குறிப்பதற்கு பதிலாக உங்களை மாற்ற முயல்வதாகும். அதனால் அதை எதிர்த்து போராடுவதா, அல்லது ஓடுவதா அல்லது மாற்றத்தை தழுவிக் கொள்வதா போன்றவைகள் எல்லாம் உங்களை பொறுத்தது.பாம்பு என்பது மயக்கத்தை குறிக்கும்
பொதுவாகவே, கனவில் பாம்பு வந்தால், நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் அல்லது உங்களது வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியாக போராடி வருகிறீர்கள் என அர்த்தமாகும். இந்த கனவு பகுப்பாய்வின் நேர்மறையான பக்கத்தை பார்த்தீர்கள் என்றால், பாம்புகளைப் பற்றிய கனவு, நடந்து கொண்டிருக்கும் குணமாக்குதல் மற்றும் மாற்றத்தை குறிக்கும்.
பாம்புகளுடனான உங்களது தனிப்பட்ட சமன்பாடு
கனவில் வரும் பொதுவான விலங்கு என்னவென்று பார்த்தோம் என்றால் அது பாம்பு தான். பாம்பு என்பது சிக்கல் மிகுந்த சின்னங்கள் ஆகும். அதற்கு காரணம் அவை நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டு அர்த்தங்களையும் கொண்டிருக்கும். பாம்பு வரும் கனவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள பாம்புகளுடனான உங்களது சொந்த அனுபவங்களை கருத வேண்டும். அதேப்போல் உங்களது கலாசாரத்தில் பாம்புகள் எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, பாம்பை வளர்ப்பு பிராணியாக வைத்துக் கொண்டால், அதை வெறுப்பவருக்கோ அல்லது பயப்படுபவருக்கோ வரும் கனவை விட வளர்ப்பவருக்கு வரும் கனவின் அர்த்தம் வேறு மாதிரியாக இருக்கும்.
பாம்புகள் பயத்தை குறிக்கும்
பலருக்கும் பாம்பு என்றால் குலையே நடுங்கும். கணிக்க முடியாதவை பாம்பு. எந்தவொரு எச்சரிக்கை இன்றியும் அது எப்போது வேண்டுமானாலும் தாக்கும். அதனால் பாம்பு வரும் கனவு உங்கள் வாழ்க்கையில் கணிக்க முடியாத ஒன்றையோ அல்லது உங்களது கட்டுப்பாட்டை மீறிய ஒன்றையோ குறிக்கும். தெரியாத ஒன்றின் மீது நீங்கள் பயம் கொண்டவராக இருப்பீர்கள்.
மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை பாம்பு குறிக்கும்
வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதர ….🙏🙏
No comments:
Post a Comment