Saturday, 24 July 2021

உங்க கனவில் பாம்பு வந்தால்!!! என்ன அர்த்தம் என்று தெரியுமா!!

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா..?மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. பாம்புகள் பயத்தை ஏற்படத்தும் வகையில் இருக்கும் போதிலும் கூட, கனவில் வரும் பாம்புகள் பொதுவாக சிக்கலான ஒன்றாக இருக்கும்.ஏனெனில் பாம்புகள் கனவில் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதே போல் பல அடுக்கு சின்னங்களையும் அவை குறிக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…உங்களை எச்சரிக்கும் முயற்சியாக இருக்கலாம்
ஆச்சரியங்கள் மூலம் பாம்புகள் தடுமாறும். இவற்றை ரகசியங்களோடு தொடர்புப்படுத்தலாம். “புல்லில் உள்ள பாம்பு” என்றால் நம்ப முடியாத ஒருவர், உங்களை ஏமாற்றக்கூடியவர், உங்களிடம் இருந்து ரகசியத்தை காப்பவர் என குறிப்பிடலாம். சுவாரசியமாக இது வேறு ஒரு நபராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அறிந்த உண்மை ஒன்று இருக்கலாம்; ஆனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்.மறைந்திருக்கும் பேரார்வங்களை கொண்டுள்ளீர்களா?கனவில் வரும் பாம்புகள், அடிப்படையில் நாம் பயப்படக்கூடிய ஆற்றல் மிக்க அறிகுறிகளை குறிக்கும். அதற்கு காரணம் அவை கொண்டுள்ள பலமும், அது கொண்டு வரும் மாற்றமே. சீறி எழும் பாம்பு, அல்லது தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இருக்கையில் விழிக்கும் பாம்பு, அல்லது சுருண்டிருந்த பாம்பு திடீரென உயிரை பெறுவது போன்றவைகள் எல்லாம் சுலபமாக ஓடத் துவங்கும் உங்களது ஆற்றல், பேரார்வம் மற்றும் உள்நோக்கத்தை குறிக்கும்.ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கும்கனவுகளில் வரும் பாம்புகள், ஆன்மீக செயல்முறையான, முதுகு தண்டின் அடியில் இருந்து தலையின் உச்சியை அடைந்து, அதற்கு மேல் செல்லும் ஆற்றலான குண்டலினியை விழிக்க வைக்கும் ஒன்று என சில கிழக்கு கலாச்சாரங்கள் நம்புகின்றன. கனவில் வரும் பாம்புகள் உங்கள் அழிவை குறிப்பதற்கு பதிலாக உங்களை மாற்ற முயல்வதாகும். அதனால் அதை எதிர்த்து போராடுவதா, அல்லது ஓடுவதா அல்லது மாற்றத்தை தழுவிக் கொள்வதா போன்றவைகள் எல்லாம் உங்களை பொறுத்தது.பாம்பு என்பது மயக்கத்தை குறிக்கும்
பொதுவாகவே, கனவில் பாம்பு வந்தால், நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் அல்லது உங்களது வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியாக போராடி வருகிறீர்கள் என அர்த்தமாகும். இந்த கனவு பகுப்பாய்வின் நேர்மறையான பக்கத்தை பார்த்தீர்கள் என்றால், பாம்புகளைப் பற்றிய கனவு, நடந்து கொண்டிருக்கும் குணமாக்குதல் மற்றும் மாற்றத்தை குறிக்கும்.
பாம்புகளுடனான உங்களது தனிப்பட்ட சமன்பாடு
கனவில் வரும் பொதுவான விலங்கு என்னவென்று பார்த்தோம் என்றால் அது பாம்பு தான். பாம்பு என்பது சிக்கல் மிகுந்த சின்னங்கள் ஆகும். அதற்கு காரணம் அவை நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டு அர்த்தங்களையும் கொண்டிருக்கும். பாம்பு வரும் கனவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள பாம்புகளுடனான உங்களது சொந்த அனுபவங்களை கருத வேண்டும். அதேப்போல் உங்களது கலாசாரத்தில் பாம்புகள் எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, பாம்பை வளர்ப்பு பிராணியாக வைத்துக் கொண்டால், அதை வெறுப்பவருக்கோ அல்லது பயப்படுபவருக்கோ வரும் கனவை விட வளர்ப்பவருக்கு வரும் கனவின் அர்த்தம் வேறு மாதிரியாக இருக்கும்.
பாம்புகள் பயத்தை குறிக்கும்
பலருக்கும் பாம்பு என்றால் குலையே நடுங்கும். கணிக்க முடியாதவை பாம்பு. எந்தவொரு எச்சரிக்கை இன்றியும் அது எப்போது வேண்டுமானாலும் தாக்கும். அதனால் பாம்பு வரும் கனவு உங்கள் வாழ்க்கையில் கணிக்க முடியாத ஒன்றையோ அல்லது உங்களது கட்டுப்பாட்டை மீறிய ஒன்றையோ குறிக்கும். தெரியாத ஒன்றின் மீது நீங்கள் பயம் கொண்டவராக இருப்பீர்கள்.
மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை பாம்பு குறிக்கும்
வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதர ….🙏🙏

Friday, 23 July 2021

யார் வீட்டில் பாம்பு வரும்? உங்கள் வீட்டிற்குள்ளும் பாம்பு புகுந்துள்ளதா? வீட்டிற்குள் பாம்பு வராமல் இருக்க என்ன செய்வது? பாம்பு வந்து விட்டால், அது நம்மை தீண்டாமல் இருக்க என்ன செய்வது?????????????????????????????????

பாம்பு என்று சொன்னால் படையே நடுங்கும் என்பார்கள்! இப்படிப்பட்ட இந்த பாம்பு வசிக்கக்கூடிய காடு மேடு கழனிகள் எல்லாம், வீடு கட்டும் நிலங்களாக மாற்றி விட்டு, அந்த இடத்தில் வீடு கட்டி குடி போகிறார்கள். அதன் பின்பு வீட்டிற்குள் பாம்பு வரத்தான் செய்யும். நாம் வசிக்கும் இடத்திற்கு பாம்புகள் வரவில்லை. பாம்பு வசிக்கும் இடத்தில் தான் நாம் குடி சென்று இருக்கின்றோம். இதை நாம் முதலில் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது கடந்த சில வருடங்களாக, பல காடு, கழனிகள் வீடு கட்டும் மனைகளாக மாறி விட்டது. சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.கிராமப்புறங்களில் வசிப்பவர்களது வீடுகளிலும் பாம்புகள் வீட்டிற்குள் வரும் பிரச்சினைகள் உண்டு. எல்லோரது வீட்டிலும் பாம்புகள் நுழையாது. வீட்டை சுற்றி கொண்டிருக்குமே தவிர, சில பேர் வீடுகளில் மட்டும் தான், வீட்டிற்குள் நுழையும். நகர்ப்புறங்களிலும் சில சமயங்களில் சில பேரது வீட்டில் பாம்பு நுழைந்த கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறாக உங்களுடைய வீடு கிராமப்புறங்களில் அமைந்திருந்தாலும் சரி, வயல்வெளிகளில் வீடு கட்டி, அந்த இடத்தில் குடியிருப்பவர்களாக இருந்தாலும் சரி, நகர்ப்புறங்களில் குடியிருப்பவர்களாக இருந்தாலும் சரி, குறிப்பாக பாம்பு வீட்டிற்குள் நுழைகிறது என்றால் அதற்கு என்ன காரணம்? எதனால் நுழைகிறது? பாம்பு வீட்டில் நுழைந்து விட்டால் அது நம்மை தீண்டாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.உங்களுடைய வீட்டில் பரம்பரை பரம்பரையாக, செய்து வந்த வழிபாட்டு முறையை திடீரென்று மாற்றினாலோ அல்லது பரம்பரை பரம்பரையாக உங்களுடைய முன்னோர்கள் செய்து வந்த காரியத்தை நீங்கள் செய்யாமல் விட்டு இருந்தாலும், உங்களுடைய  வீட்டில் பாம்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.சில பேரது வீட்டில் விவசாயம் செய்வதை தொழிலாக வைத்திருப்பார்கள். இப்படியாக காடுகளுக்கு செல்லும்போது, விவசாயம் செய்யும் போது, பாம்பை கொன்று இருந்தாலும், அல்லது பாம்புப் புற்று இருந்த இடத்தில் அந்த பாம்பு புற்றை நீக்கிவிட்டு, விவசாயம் செய்தாலும், அந்த இடத்தில் வீடு கட்டினாலும், தொழில் செய்யும் இடம் கட்டினாலும், இப்படிப்பட்டவர்களது வீட்டிலும் பாம்பு புகும்.சில வீட்டில் இருக்கும் பெண்கள் இறைவனை ரொம்ப வழிபாடு செய்வார்கள். அதாவது உருகி உருகி விரதமிருப்பது, வேண்டுதல் வைப்பது போன்ற ஆன்மீக ரீதியான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அவர்களுக்கு மன குழப்பங்கள் நிறைய எழுந்துகொண்டே இருக்கும். தேவையற்ற சிந்தனையோடு வாழ்பவர்களது வீட்டிலும் பாம்பு புகும்.இப்படியாக வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டது. என்ன செய்வது? பயம்! அதை அடித்து தான் ஆக வேண்டும். நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது. இப்படியாக அந்தப் பாம்பை அடித்தவர்களினுடைய சந்ததியினர் எங்கு வீடு கட்டினாலும் அவர்களுடைய வீட்டிலும் பாம்பு புகும் என்று சொல்லப்பட்டுள்ளது.பாம்பு இந்த இடத்தில் இருக்கின்றது என்று காட்டிக் கொடுத்தவர்களுடைய வீட்டிலும் பாம்பு புகும். என்று சொல்லப்பட்டுள்ளது. சரிங்க இந்த பாம்பு வீட்டிற்குள் புகாமல் இருக்க ஏதாவது வழி உள்ளதா? என்று கேட்பவர்களுக்கும் இந்த பதிவின் மூலம் பதில் உள்ளது.நாட்டு மருந்து கடைகளில் விற்கும் நாக தந்தி வேர் என்று சொல்லப்படும் இந்த வேரை வாங்கி ஒரு செப்பு கம்பியால் கட்டி, வீட்டின் நான்கு பக்கங்களிலும் வைத்துவிட்டால் வீட்டிற்குள் பாம்பு நுழையாது. இதேபோல் சிறியாநங்கை பெரியாநங்கை செடிகளை, வீட்டின் முன் பக்கம் பின் பக்கம் போன்ற இடங்களில் வளர்த்தாலும் வீட்டிற்குள் பாம்பு நுழையாது. பொதுவாகவே நல்ல பாம்பு, சாரை பாம்பு இந்த இரண்டு பாம்புகளை அடிக்கக் கூடாது என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். மற்ற பாம்புகள் ஆக இருந்தாலும் அதை அடிப்பது பாவம் தான், இருப்பினும் விஷமுள்ள ஜந்து தீண்டி விடுமோ என்ற பயத்தில் உயிர் மேல் உள்ள ஆசையில் அடித்து விடுகின்றோம். குறிப்பாக நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் அடிக்கக் கூடாது என்று மட்டும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முடிஞ்ச வரைக்கும் இத அடிக்காமல் பாத்துக்கோங்க!உங்களுக்கு மன உறுதியும் மன தைரியமும் அதிகமாக இருக்கின்றதா? தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருந்தால், உறுதியோடு இருப்பவர்களாக இருந்தால் மட்டும், ஒருவேளை உங்களுடைய வீட்டில் பாம்பு வந்து விட்டாலும் அல்லது பாம்புகள் உலவும் வயல்வெளிகளுக்கு நீங்கள் சென்றாலும், உங்களை பாம்புகள் தீண்டாமல் இருக்க, உங்கள் பக்கம் பாம்புகள் வராமல் இருக்க இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு செல்லலாம். நிச்சயம் பாம்பு உங்களுடைய கண்களுக்கு தென்படாது. உங்களுக்கான அந்த மந்திரம் இதோ! ஓம் அஸ்திக சித்தா ரட்சிப்பாய்!ஒருவேளை உங்களுடைய வீட்டிற்குள் பாம்புகள் நுழைந்து விட்டால், இந்த மந்திரத்தை வாய்விட்டு உச்சரித்தால், பாம்பு வந்த வழி தெரியாமல் போய்விடும். பதிவில் படித்து விட்டோம் என்பதற்காக, விஷமுள்ள பாம்பை கண்டவுடன், இந்த மந்திரத்தை சொல்லி, அந்தப் பாம்பு கிடைக்கின்றதா என்றெல்லாம் சோதிக்கக் கூடாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள மந்திரம் இது. நம்பிக்கை உள்ளவர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள பதிவு இது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.